இழுத்துப் போர்த்திக் கொண்டுதான் நடிப்பேன் நான் அடம்பிடிப்பதாக சில பத்திரிகைகளும் இணைய தளங்களும் எழுதி வருகின்றன. ஆனால் அது உண்மையில்லை. எந்த வேடமாக இருந்தாலும், நான் நடிப்பேன் என்று தைரியமாக சொல்கிறார் ஒரு நடிகை. பொய்யில் அறிமுகமாகி, ராமன் தேடிய சீதையில் அசத்திய விமலா ராமன். இப்போது தெலுங்குப் படம் ஒன்றில் காமெடி கலந்த வேடத்தில் நடித்து வரும் விமலா, அடுத்து இரு தமிழ்ப் படங்களில் நடிக்கவிருக்கிறார். "என்னைப் பார்த்தவுடனே குடும்பப் பாங்கான நடிகை என்று முத்திரை குத்தியது மீடியா. அது அவங்க தப்பு. நானா அப்படிச் சொன்னேன்? என்று கேட்கிறார் விமலா. அழுகையான பாத்திரங்களில் நடித்து மட்டும்தான் சிறந்த நடிகை என நிரூபிக்க வேண்டியதில்லை. கவர்ச்சி வேடங்களிலும் பெயர் வாங்க முடியும் என்று சொன்னார்.சோர்ஸ்: http://tamilshots.mywebdunia.com/2008/11/26/1227698460000.html
No comments:
Post a Comment