Thursday, December 4, 2008

மனம் கவர்ந்த நாயகி

நயந்தாரா லிங்குசாமி புகழாரம்
டைரக்டர் லிங்குசாமிக்கு ஸ்ரீதேவிக்கு எப்படி அழகும்,கவர்ச்சியும் சேர்ந்து இருந்ததோ அதேபோல் நயன்தாரா அழகாகவும்,கவர்ச்சியாகவும் தெரிகிறார்.அதனால் தன்னை கவர்ந்த கதாநாயகி நயன்தாரா என்று கூறுகிறார்.கார்த்தி-நயன்தாரா ஜோடியாக நடிக்கும் `பையா' என்ற புதிய படத்தை லிங்குசாமி டைரக்டு செய்கிறார். இந்த படத்தை திருப்பதி பிரதர்ஸ் சார்பில் அவருடைய தம்பி என்.சுபாஷ் சந்திரபோஸ் தயாரிக்கிறார்.`பையா' படத்தில் நடிப்பதற்காக நயன்தாராவுக்கு ரூ.1 கோடிக்கு மேல் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதால் தமிழ் பட உலகில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய முதல் கதாநாயகி, நயன்தாராதான் என்பது குறிப்பிடத்தக்கது1 கோடி சம்பளம் கொடுத்து நயன்தாராவை நடிக்க வைக்க காரணம் என்ற கேள்விக்கு, லிங்குசாமி பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-``அழகும், கவர்ச்சியும் நிறைந்த ஒரே நடிகை ஸ்ரீதேவி. அவருக்குப்பின்,அதே அழகும்,கவர்ச்சியும் சேர்ந்து இருப்பது நயன்தாரா தான்.பையா' படத்தின் கதைக்கு பொருத்தமான நயன்தாரா நிச்சயம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெறுவார்.ரசிகர்கள் எதிர்பாக்கும் அனைத்து நடிப்பு அம்சங்களும் நிறைந்தவர் நயன்தாரா.கதாநாயகன் கார்த்தியும் அழகான,ஸ்டைலான கார்த்தியை பார்க்கலாம். வில்லனாக மிலின்ட் சோமன் நடிக்கிறார்.பெங்களூரில் இருந்து மும்பைக்கு செல்லும் நெடுஞ்சாலையில், ஒரு காரில் நடக்கிற கதை இது.முதல்கட்ட படப்பிடிப்பு பெங்களூரில் இம்மாதம் 15-ந் தேதி தொடங்கி 20 நாட்கள் நடைபெற இருக்கிறது.''இவ்வாறு டைரக்டர் லிங்குசாமி கூறினார்.ஏற்கனவே ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பீமா போன்ற வெற்றி படங்களை டைரக்டு செய்தவர் லிங்குசாமி என்பது அனைவரும் அறிந்த விஷயம்.
சோர்ஸ்: http://nayanthara.mywebdunia.com/2008/12/04/1228374180000.html

No comments:

Post a Comment