ஜே.ஆர் காலத்திலிருந்து இன்றைய மஹிந்த ராஜபக்ச காலம் வரைக்கும் வெளிநாட்டு படைகளையும் வெளிநாட்டு தொழில்நுட்ப உதவிகளையும் பெற்று யுத்தம் செய்யும் இலங்கை அரசு தன்னை மாதிரி சுயபுத்தி இல்லாமல் இரவல் புத்தியில் தமிழீழ விடுதலை புலிகள் செயற்படுவதாக சொல்லி தானும் தன் இனத்தையும் உதவி கோரும் நாடுகளையும் திருப்திபடுத்த முயல்கின்றதோ இல்லையோ தமிழனின் பெருமையை மூடிமறைக்கின்றது.2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதன் முதலில் புலிகளால் பலாலி விமானத் தளத்தின் மீது விமானத்தாக்குதல் நடத்தப்பட்டது.இதனை இல்லை என்று மறுத்ததா?அல்லது மூடிமறைத்ததா?பின்னர் கொழும்பில் விமானத்தாக்குதல் நடத்தும்போது "சிறியரகம் குரும்பட்டியளவு" என்று சிங்களம் தான் திருப்திபட்டதோ இல்லையோ மூடிமறைத்தது.வன்னியின் பிரதான இராணுவ முகாமான வவுனியா ஜோசப் காம்ப் மீதான தாக்குதல் ஒரு தொழில்நுட்ப ரீதியான வினைத்திறனானதாக தெரிந்தாலும் பொருளாதாரத் தடைகள்,உணவு நெருக்கடிகள் மற்றும் மனித உரிமை மீறல்களிற்கு மத்தியில் தமிழர்களுடைய வளர்ச்சியை தெட்டத்தெளிவாக உலகிற்கு உணர்த்தியிருக்கின்றார்கள்.இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டிருந்தாலும்,இந்தியாவால் வழங்கப்பட்ட ராடர்களும் அதன் கட்டுப்பாட்டு அறைகளும் சேதமடைந்துவிட்டன.ஆனாலும் புலிகளின் குரும்பட்டி விமானத்தை சிங்கள படைகளால் வீழ்த்த முடியவில்லையே என்ற ஏக்கம் தான் உலக நாடுகளிற்கு மிஞ்சிய ஒன்று.மஹிந்த அரசை விட, பொருளாதாரம் கூடிய சிங்கள தேசத்திற்கு தமிழ் தேசத்தால் ஏற்பட்ட அவமானம் ஆகவே கருதமுடிகிறது.12.09.2008 அன்று வெளியான ஆங்கில ஊடகத்தின் கட்டுரையில் புலிகளின் விமானத்தை ஒட்டியவர்கள் வெளிநாட்டினரா?என்று கேள்வி எழுப்பியிருப்பதன் மூலம் தமிழர்கள் திறமைசாலிகள் இல்லை,என்று கூறமுனைகிறார்களா?அல்லது அவ்வாறு கூறி சிங்கள மக்களை சந்தோசப்படுத்துகிறார்களா?அல்லது இந்தியாவை புலிகளிற்கு எதிரான போரில் தீவிரப்படுத்தி உதவிகளை பெற முனைகிறார்களா?சிங்கள ஊடகங்களின் பண்பு மூடிமறைப்பது என்றாலும் இதன் மூலம் தெளிவாவது தாங்கிக்கொள்ள முடியாத பொறாமையின் வெளிப்பாடுதான் புலிகளின் விமானத்தை ஒட்டியவர்கள் வெளிநாட்டினரா?என்ற கேள்வி.மூடிமறைத்தாலும் புலிகளின் விமானத்தை ஓட்டியது தமிழன் தான் என்பது உறுதி.ஜக்கிய நாடுகள் சாசனத்தில் இருந்து வெளிப்படாத ஒன்று சொந்த மண்ணில் உள்ள வளங்களை பயன்படுத்தி சிறப்பான போராட்டம் நடத்துகின்ற இயக்கங்களிற்கு அல்லது அந்த விடுதலை இயக்கங்கள் சார்ந்து நிற்கின்ற இனங்களிற்கான அங்கீகாரம் வழங்கப்படவேண்டும் என்பது.. ஆனால் ஏனோ சர்வதேசம் தமிழினத்தை மட்டும் புறக்கணிக்கிறது.
No comments:
Post a Comment